அரகண்டநல்லூர் பகுதியில்மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 வாலிபர்கள் பிடிபட்டனர்
அரகண்டநல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 வாலிபர்கள் பிடிபட்டனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் நேற்று திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 பேர் போலீசாரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வடகரைதாழனூரை சேர்ந்த முகிலன் (வயது 21), திருமலைப்பட்டை சேர்ந்த அய்யப்பன் (21), அருண்குமார் (20) ஆகியோர் என்பதும், அரகண்டநல்லூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடி எடுத்து வந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அருண்குமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.