தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் காவிரி ஆற்றின் நடுவில் சிக்கிய 3 வாலிபர்கள் மீட்பு


தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் காவிரி ஆற்றின் நடுவில் சிக்கிய 3 வாலிபர்கள் மீட்பு
x

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் காவிரி ஆற்றின் நடுவில் சிக்கிய 3 வாலிபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சேலம்

மேட்டூர்:

கரையேற முடியாமல் தவித்தனர்

மேட்டூர் அணை நேற்று நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காலையில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பானது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலையில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த ரவி, பிரபு, தினேஷ் ஆகிய 3 வாலிபர்கள் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே தண்ணீர் வெளியேறும் பாதையில் ஒரு பாறையின் மீது நின்று தண்ணீர் வழிந்து ஓடும் காட்சியை ரசித்தனர்.

இந்த நிலையில் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு திடீரென அதிகரிக்கப்பட்டதால் அவர்களால் உடனடியாக அந்த பாறையில் இருந்து தண்ணீரை கடந்து கரையேற முடியாமல் தவித்தனர். உடனடியாக அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.

3 பேர் மீட்பு

அவர்களின் கூக்குரல் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் மேட்டூர் கருமலைக்கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேட்டூர் தீயணைப்பு நிலையத்தில் கருமலைக்கூடல் போலீசார் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி 3 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்து மேட்டூர் உதவி கலெக்டர் சரண்யா, தாசில்தார் முத்துராஜா மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரின் நடுவில் சிக்கிக்ெகாண்ட 3 வாலிபர்களை பத்திரமாக மீட்பதற்கான வழிமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்தனர். இதன் காரணமாக மேட்டூர் அனல் மின் நிலைய சாலையில் சுமார் ஒரு மணி நேரம் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.


Next Story