கோவையில் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு..!

உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரம் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று விளம்பர பலகை திடீரென சரிந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விளம்பர பலகை கட்டும் பணியின் போது, இந்த விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





