செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது


செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது
x

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

சென்னை

செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.அப்போது அந்த வீட்டில் 300 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது சம்பந்தமாக அதே பகுதியைச் சேர்ந்த அசோகன் (வயது 50) மற்றும் அருண்குமார் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கடத்தி செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்து இருந்தனர்? என்பது குறித்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story