வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.31¾ லட்சம் வருவாய்


வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.31¾ லட்சம் வருவாய்
x
தினத்தந்தி 14 Jun 2023 8:45 PM GMT (Updated: 15 Jun 2023 12:14 PM GMT)

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.31¾ லட்சம் வருவாய் கிடைத்தது.

தேனி

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெரும். அப்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். இதுதவிர புகழ்பெற்ற சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த கோவிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, சித்திரை திருவிழாவுக்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதற்கிடையே சித்திரை திருவிழாவையொட்டி 22 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டன. அந்த உண்டியல்கள் யாவும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. அதன்மூலம் ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்து 430 வருவாயாக கிடைத்தது.

இந்தநிலையில் கோவிலில் நேற்று நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் தலைமையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சவுராஷ்டிரா கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது உண்டியல்கள் காணிக்கை மூலம் ரூ.31 லட்சத்து 76 ஆயிரத்து 980 வருவாயாக கிடைத்தது. இதுதவிர 63 கிராம் தங்கம், 382 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளர் தியாகராஜன், கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலு, கணக்கர் பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story