நாய் கடித்து 32 ஆடுகள் பலி


நாய் கடித்து 32 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 5:01 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 32 ஆடுகள் பலியாகின.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செந்தட்டியில் இருந்து வேப்பங்குளம் செல்லும் சாலையில் செந்தட்டியைச் சேர்ந்த வேல்சாமி மகன் சரவணன் (வயது 39) என்பவர் ஆட்டுக் கொட்டகை அமைத்து சுமார் 41 ஆடுகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த ஆட்டுக்கொட்டகைக்குள் நாய்கள் கூட்டமாக புகுந்து ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இதில் 24 செம்மறி ஆடுகளும், 8 வெள்ளாடுகளும் உயிரிழந்தன. மேலும் 9 ஆடுகள் பலத்த காயமடைந்தன. நாய்கள் கூட்டமாக சென்று ஆடுகளைக் கடிக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story