திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை
x

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

35 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலத்துக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டமாக 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் கூடுதலாக 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேரும் வீட்டு தனிமையில் உள்ளனர்.

4.1 சதவீதமாக அதிகரிப்பு

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி 1.4 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று பரவல் 2-ந்தேதி நிரவரப்படி 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், வெளியிடங்களுக்கு சென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கட்டாயம் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story