ஒரே நாளில் சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 35 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் சாராயம், மதுபாட்டில்கள் விற்றது தொடர்பாக 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்த 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகள் 11 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்றது தொடர்பாக 32 வழக்குகளை பதிவு செய்து 35 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 779 லிட்டர் சாராயம், 193 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story