அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக சோதனை - அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை


அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக சோதனை - அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை
x

அரசு ஒப்பந்ததாரர் வருமானத்தை கணக்கில் காட்டாமல் சுமார் 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 3-வது நாளாக இன்று சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்த பணிகளை ஒப்பந்ததாரர் பாண்டிதுரை மேற்கொண்டுள்ளார்.

இதில் தரமற்ற பொருட்களைக் கொண்டு ஒப்பந்த பணிகளை இவர் மேற்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் காட்டாமல் சுமார் 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரில் இருந்து பாண்டிதுரையை புதுக்கோட்டைக்கு வரவழைத்த அதிகாரிகள் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சோதனையில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஒருங்கிணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story