ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது


ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
x

பள்ளிபாளையம் அருகே ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

குமாரபாளையம்

பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஜவுளி க்கடை அதிபர். கடந்த 8-ந் தேதி இவருடைய தந்தை மணியண்ணன் தனியாக வீட்டில் இருந்தபோது இவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம், 18 பவுன் நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இது குறித்து பிரகாஷ் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி 7 பேரையும், மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 பேரை கைது செய்தனர். இதற்கு மூல காரணமாக இருந்த பூசாரி ரமேஷ் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த யுவராஜ் (வயது 32), ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் (43), கரூரைச் சேர்ந்த ரத்தினகுமார் (32), வாழப்பாடியை சேர்ந்த பெரிய தம்பி (48) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய ஒரு கார், 6 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேரிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story