கவுன்சிலரை அரிவாளால் வெட்டியதாக 4 பேர் கைது


கவுன்சிலரை அரிவாளால் வெட்டியதாக 4 பேர் கைது
x

மேட்டூர் நகராட்சி கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

மேட்டூர்:-

மேட்டூர் நகராட்சி கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகராட்சி கவுன்சிலர்

மேட்டூர் குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). தி.மு.க.வை சேர்ந்த இவர், மேட்டூர் நகராட்சி 14-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி வெங்கடாசலம், நகராட்சி அலுவலகத்துக்கு காரில் வந்தார். அவர் காரை விட்டு இறங்கியபோது, பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெங்கடாசலத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

அதை அவர் தடுத்தபோது, கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர் நகராட்சி அலுவலகத்துக்குள் ஓடியதால், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

4 பேர் கைது

இந்தநிலையில் கவுன்சிலர் வெங்கடாசலத்தை கொலை செய்ய முயன்ற மேட்டூர் பொன்நகர் வாய்க்கால் பாலம் பகுதியை சேர்ந்த பிரபு (33), அண்ணை நகர் கெடாகுமார் என்கிற ஜெயக்குமார் (37), சர்ச் ரோடு மணிவாசகம் (24), காவிரி பாலம் மீனவர் தெரு ராமச்சந்திரன் (27) ஆகிய 4 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி கைது செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இருந்தாலும் கவுன்சிலர் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கைதான பிரபுவின் உறவினர் கொலை செய்யப்பட்டதில் வெங்கடாசலத்துக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதைதொடர்ந்தே இந்த கொலை முயற்சி நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேக்கிறார்கள். கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் காரணம் முழுமையாக தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.


Next Story