பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை பகுதிகளில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் குடுமியான்மலை பெரியகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அன்னவாசல் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 32), முத்துசாமி (42), வீரையா (45), நவமணியன் (62), வெங்கடாசலம், சுதாகர்பாண்டி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சூதாட்ட அட்டைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story