பெண் இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசிய பா.ஜ.க.வினர் 4 பேர் கைது
பெண் இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசிய பா.ஜ.க.வினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அறந்தாங்கியில் சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் பதவி விலகக்கோரி அறந்தாங்கி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரியை பணி செய்ய விடாமல் தடுத்து அவரை அவதூறாக பேசியதாக மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயபாண்டியன், வடக்கு ஒன்றிய தலைவர் சோனாகருப்பன், மாவட்ட துணைத்தலைவர் சந்தானத்தம்மாள் ஆகிய 4 பேரை அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவர்களை அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அதில் 4 பேரையும், 25-ந் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதில் ஜெயபாண்டியன், சோனா கருப்பன், சந்தானத்தம்மாள் ஆகியோரை போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர். முரளிதரன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.