ரூ.4¼ கோடியில் திட்டப்பணிகள்
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.4¼ கோடியில் திட்டப்பணிகள் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று காலை ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக, மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் திறப்பு விழா மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இவ்விழாவில் துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மாவட்ட கவுன்சிலர்கள் விஸ்வநாதன், பிரபு, ராஜீவ்காந்தி, அன்புமணி, தமிழ்ச்செல்வி கேசவன், முருகன், வனிதா அரிராமன், கவுதம், பனிமொழி செல்வரங்கம், பிரேமா குப்புசாமி, மீனா வெங்கடேசன், சாந்தி சுப்பிரமணி, செல்வி ராமசரவணன், அன்புச்செழியன், அகிலா பார்த்திபன், அரங்க ஏழுமலை, எழிலரசி ஏழுமலை, மகேஸ்வரி குமரேசன், விஜயன், சசிகலா மோகனசுந்தரம், மனோசித்ரா ராஜேஸ்வரன், புஷ்பவள்ளி குப்புராஜ், சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.