காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம்: பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை


காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம்: பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை
x

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பிலிப்பட்டி கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகியோர் கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் பிலிப்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், திங்கட்கிழமை முதல் பள்ளி வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story