சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு


சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
x

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை,

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆா்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ராஜசேகா் ஆகிய நான்கு பேரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு கூடுதல் நீதிபதிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுடன் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கலந்து கொண்டு புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


Next Story