மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரவாபாளையம் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் புங்கோடை காளிபாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 56) என்பவர் மது விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ேமலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 46 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தரகம்பட்டி அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்த பொன்னுசாமி (42) என்பவர் ஆற்றுவாரி பகுதியிலும், சாந்துவார்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (55) என்பவர் பாலவிடுதி அருகே தெற்கு பகுதியிலும், சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (26) என்பவர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியிலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் பாலவிடுதி போலீசார் கைது செய்தனர்.அரசு பள்ளியில் உணவு திருவிழா

நொய்யல், அக்.7-

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் வானவில் மன்றத்தின் சார்பாக உணவுத் திருவிழா நடைபெற்றது. விழாவினை பள்ளி தலைமையாசிரியை வளர்மதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயார் செய்து கொண்டு வந்திருந்த பல்வேறு வகையான உணவுகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். இதனை ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மன்றத்தின் பொறுப்பு ஆசிரியை பிரியா, வானவில் மன்றத்தின் பொறுப்பு ஆசிரியை தீபா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story