தண்டையார்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது


தண்டையார்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது
x

தண்டையார்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஆர்.கே.நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை சோதனை செய்தபோது, அவர்களிடம் சில மாத்திரைகள் இருந்தது. இதனால் 2 பேரையும் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 19) மற்றும் 18 வயது வாலிபர் என்பதும், இவர்கள் செங்குன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (23), கோவர்தனன் (23) ஆகியோரிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை வாங்கி வந்து இப்பகுதியில் அதிக விலைக்கு விற்றதுடன், தாங்களும் பயன்படுத்தி வந்ததாக தெரிவித்தனர்.

2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் செங்குன்றத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி, கோவர்தனன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story