வெள்ளாற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது


வெள்ளாற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது
x

வெள்ளாற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே கீழகல்பூண்டி வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கீழகல்பூண்டி வெள்ளாற்று பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஒரு கும்பல் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் சிலர், டிராக்டரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் சுதாரித்துக் கொண்ட போலீசார், 4 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கீழகல்பூண்டியை சேர்ந்த பரமசிவம் மகன் மணிரத்தினம் (வயது 32), புலிகரம்பூரை சேர்ந்த நல்லதம்பி மகன் ராஜ்குமார்(29), டிப்பர் லாரி உரிமையாளரான புதுக்குளத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் முருகானந்தம்(28), பொக்லைன் எந்திர உரிமையாளரான கண்டமத்தானை சேர்ந்த ராமசாமி மகன் செல்வகுமார்(43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிரத்தினம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


Next Story