சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி 4 பேர் படுகாயம்


சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி 4 பேர் படுகாயம்
x

சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி 4 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சி

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சஷ்டி (வயது 37). இவருடைய மனைவி சத்யா (36). இவருடைய உறவினர் கணேசன் (59), அவரது மனைவி குப்பு (57). நேற்று முன்தினம் மதியம் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி சாலையில் இவர்கள் காரில் வந்தனர். காரை சஷ்டி ஓட்டி வந்தார். திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கார் வந்த போது, சாலையின் குறுக்கே திடீரென ஒரு மாடு வந்தது. அதன்மீது மோதாமல் இருக்க சஷ்டி உடனடியாக காரின் பிரேக்கை பிடித்துள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மையத்தடுப்பில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்தவழியாக வந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story