வைகை வடகரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் சென்ற 4 பேர் கைது


வைகை வடகரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் சென்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2023 1:15 AM IST (Updated: 20 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

வைகை வடகரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை வைகை வடகரை மதிச்சியம் ஆர்.ஆர்.மண்டபம் அருகே நான்கு வாலிபர்கள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள் ரேஸ் சென்று கொண்டிருந்தனர். இது குறித்து மதிச்சியம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வேகமாக 4 மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில் ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த அபிலாஷ் (வயது 22), தீபக் பாண்டியன் (19), அஜய் (22), எஸ்.ஆலங்குளம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (19) என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிளை வேமாக ஓட்டி சென்றதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி சென்ற 4 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story