மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
x

மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பிரம்மதேசம் ரோடு வி.ஆர்.எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ராஜகோபாலின் மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 68). கணவர் இறந்து விட்டதால் கிருஷ்ணம்மாள் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கிருஷ்ணம்மாளின் வீட்டின் முன்பு உள்ள எருக்கன் செடியின் இலையை பறித்துக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட கிருஷ்ணம்மாள் அந்த நபரிடம் எதற்காக பறிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் குழந்தையின் மருத்துவத்துக்கு பறிப்பதாக கூறி விட்டு, கிருஷ்ணம்மாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story