தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு


தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
x

தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பெரம்பலூர்

தொண்டப்பாடி கிராமத்தில் மாணிக்கம், அவரது மனைவி மாக்காயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கான ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, நிருபர்களிடம் கூறியதாவது;-இரட்டை கொலை தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை கொலை சம்பந்தமாக இரண்டு விதமான விசாரணையை தொடங்கி உள்ளோம். நகை, பணத்தை கொள்ளையடிப்பதற்காக வந்தவர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக, உறவினர், உள்ளூர்வாசிகளே யாராவது இந்த கொலைகளை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக மிளகாய் பொடியை தூவிவிட்டு குற்றவாளிகள் சென்றுள்ளதால், பழைய குற்றவாளிகளா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அந்த பகுதியில் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story