சென்னை போக்குவரத்துக் காவல் துறையை நவீனப்படுத்த 4 தொழில்நுட்ப திட்டங்கள் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்


சென்னை போக்குவரத்துக் காவல் துறையை நவீனப்படுத்த 4 தொழில்நுட்ப திட்டங்கள் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
x

சென்னை போக்குவரத்து காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் 4 புதிய தொழில்நுட்ப திட்டங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினை நவீனப்படுத்தும் வகையில், 6 வேகக் காட்சி பலகைகள், 45 பல்நோக்குச் செய்தி பலகைகள், 139 LED பொருத்தப்பட்ட போக்குவரத்து காவல் நிழற்குடைகள் மற்றும் 170 ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள் உள்ளிட்ட 4 நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய சாதனங்களின் இயக்கத்தை, காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார்.

தற்போது சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.27,18,130 .செலவில் 170 சந்திப்புகளில் ரிமோட் கண்ட்ரோல் முறைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரிமோட் சிக்னல் மூலம் போக்குவரத்து காவலர்கள் திறமையாக செயல்படவும், சந்திப்புகளில் வாகன ஓட்டிகளின் சிறந்த ஒழுக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ரிமோட் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.

வேகக் காட்சி பலகைகள்: வாகனங்களின் அதிக வேகம் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. பல்வேறு சாலைகளில் வேக வரம்புகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவும், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேக வரம்புடன் தங்கள் வாகனத்தை கடக்க அனுமதிக்கவும், ஆறு இடங்களில் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து மொத்தம் ரூ.25,31,100 செலவில் வேகக் காட்சிப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. D2 காவல் நிலையம் எதிரில், உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சில், ஜி3 காவல் நிலையம் எதிரில், விஜிபி அருகில், அசோக் நகர் செக்டார் 10 மற்றும் செக்டர், தரமணியில் அமெரிக்கன் பள்ளிக்கு எதிரே என்று 6 இடங்களில் இது நிறுவப்பட்டுள்ளது.

பல்நோக்குச் செய்தி பலகைகள்: 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில், நகரில் 45 பல்நோக்குச் செய்தி பலகைகள் (VMS Boards) நிறுவப்பட்டன. இந்த பலகைகள் காலபோக்கில் பழுதடைந்து செயல் இழந்து விட்டன. இதை சீர் செய்வதற்கும். 3 ஆண்டுளுக்கு பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து, மேற்படி 45 பல்நோக்குச் செய்தி பலகைகள் சோதனை முறையில் சரிபார்க்கப்பட்டு ரூ.3 கோடி தொகையில் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது.

எல்இடி பொருத்தப்பட்ட போக்குவரத்து காவல் நிழற்குடை: போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 139 போக்குவரத்து நிழற்குடைகள் தகுந்த மின் இணைப்புடன் சரி செய்யப்பட்டு காவல் நிலையத்தின் பெயர்கள் வர்ணம் பூசப்பட்டு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் LED சுழற்சி செய்தியுடன் கூடிய போக்குவரத்து காவல் நிழற்குடையாக நிறுவப்பட்டுள்ளது.

ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள்: சென்னையில் அனைத்து சிக்னல்களையும் இயக்குவதற்கு தானியங்கி மற்றும் கையால் இயக்குவதற்கான வசதிகள் உள்ளன. இவ்வாறு இயக்கப்படும் சிக்னல்களின் சிக்னல் கட்டுப்பாட்டை மாற்றுவதற்கு அருகில் சென்று செயல்படுத்த வேண்டியதாக உள்ளது. இதனால் அந்த சந்திப்பில் மற்ற பகுதிகளுக்கு சென்று போக்குவரத்து நிலையை கண்காணிப்பதற்கும், விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காணவும் முடியவில்லை.


Next Story