சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து


சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 14 Sept 2023 1:15 AM IST (Updated: 14 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாவது:-

ஜோலார்பேட்டை- சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. எனவே கோவை, சேலம் வழியாக செல்லும் கொச்சுவேலி- பெங்களூரு ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16319) வருகிற 23-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் பெங்களூரு- கொச்சுவேலி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16320) மற்றும் எர்னாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12683) 24-ந் தேதியும், பெங்களூரு- எர்னாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12684) 25-ந் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story