விவசாயிக்கு 4 ஆண்டு சிறை


விவசாயிக்கு 4 ஆண்டு சிறை
x

முன்விரோதத்தில் அரிவாள் வெட்டிய வழக்கில் விவசாயிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 28). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் பெருமாள்பட்டி தெருவை சேர்ந்த சித்திரை கனி (50) (விவசாயி) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சித்திரை கனி அரிவாளால் ஆறுமுகத்தை வெட்டியுள்ளார்.

படுகாயம் அடைந்த ஆறுமுகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சித்திரக்கனியை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், சித்திரை கனிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story