தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில்


தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில்
x

மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

காதல் திருமணம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜன் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான ஆனந்தசெல்வி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே குடும்ப பிரச்சினையால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இந்த நிலையில் ஆனந்தசெல்விக்கு 2-வது தாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைப்பதற்கு அவரது பெற்றோர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி ஆனந்தசெல்வி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

4 ஆண்டு ஜெயில்

அப்போது அங்கு வந்த பூபதி ராஜன் அவரை வழிமறித்து திட்டியதுடன் தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஆனந்தசெல்வி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி வழக்கில் பூபதி ராஜனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மனைவியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக பூபதி ராஜனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தீர்ப்பு அளித்தார்.


Next Story