ஸ்ரீபெரும்புதூரில் 40 அடி உயர விஸ்வரூப பாலமுருகன் சிலை - 2 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம்
பெண்கள் 108 பேர் பால்குடம் சுமந்து வந்து விஸ்வரூப முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் அமைந்துள்ள விஸ்வரூப பாலமுருகன் ஆலயத்தில் ஒரே கல்லால் ஆன 180 டன் எடை கொண்ட 40 அடி உயர பாலமுருகன் மூலவராக காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் இன்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வெகு விமரிசையாக விஸ்வரூப முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
ரத்தினிகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பெண்கள் 108 பேர் பால்குடம் சுமந்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story