புழல் சிறையில் நீண்ட காலமாக இருந்த 40 கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
இதேபோல், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து தற்போது 40 கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலையாகி உள்ளனர்.
Related Tags :
Next Story