அச்சக உரிமையாளர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு


அச்சக உரிமையாளர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
x

அச்சக உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருடப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஓழையூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி (வயது 40). அச்சக உரிமையாளர். இவரது மனைவி புனிதா (35).

புனிதாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டிக்கொண்டு காஞ்சீபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். சிகிச்சை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு நாகமணியும், புனிதாவும், அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர் உடனடியாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருந்து தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story