அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்பட 45 கட்டிடங்கள் இடித்து அகற்றம்


அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்பட 45 கட்டிடங்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்பட 45 கட்டிடங்கள் இடித்து அகற்றம்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் குழு அமைத்துள்ளார். இந்த குழுவினர் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிழக்கு மண்டலம் 55-வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஐ.எச். எஸ் காலனியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீடுகள், வணிகக் கட்டடங்கள், கட்சி அலுவலகங்களை காலி செய்ய கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கட்டடங்களை காலி செய்ய ஒரு மாதம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் குழுவினர் நேற்று பொக்லைன் எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்து அகற்றினர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகம், அ.தி.மு.க. அலுவலகம், எச்.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலகம் மற்றும் கடைகள் உள்பட 45 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடத்துக்காக காத்திருப்பதால், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 12 வீடுகள் மட்டும் இடிக்கப்படவில்லை.



Next Story