சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்


சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
x
கோப்புப்படம் 
தினத்தந்தி 1 July 2022 7:47 PM IST (Updated: 1 July 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை தாஜ் ஓட்டலில் வரும் 4ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும். இ

ந்த மாநாட்டின் மூலம் ரூ.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது கடந்த ஓராண்டு காலத்தில் தொழில்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளது. 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story