5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
*வணிக வரித் துறை ஆணையராக இருந்த தீரஜ் குமார், தகவல் தொழில்நுட்பம் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்கலா உஷா சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* குமரகுருபரன் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Related Tags :
Next Story