குரூப் 4 தேர்வில் 5 லட்சம் பேர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி - அதிர்ச்சி தகவல்


குரூப் 4 தேர்வில் 5 லட்சம் பேர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி - அதிர்ச்சி தகவல்
x

கோப்புப்படம்

குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததால் அவர்களுடைய முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளி அன்று குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பல தேர்வர்களும் தங்களுக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என்று கூறினர். இன்னொரு புறம் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வராத தேர்வர்கள் சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததால் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பாக வருகிற புதன்கிழமை டிஎன்பிஎஸ்சி தலைவர், தலைமையில் ஆணைய கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story