பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x

பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார்.

சென்னை,

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் நடைபெறும் இந்த விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் சோதனையில் ஈடுபட உள்ளனர். மேலும் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட உள்ளனர்.



Next Story