சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்: நாளை பதவியேற்பு


சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்: நாளை பதவியேற்பு
x

கோப்புப்படம்

சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் நாளை பதவியேற்க உள்ளனர்.

சென்னை,

கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது.

இவர்களில் வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.

ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் நாளை பதவியேற்கவுள்ளனர். நாளை காலை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி, விக்டோரியா கவுரி ஆகியோர் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story