சாலையை சேதப்படுத்திய 5 பேர் கைது
சாலையை சேதப்படுத்திய 5 பேர் கைது
ராமநாதபுரம்
சாயல்குடி,
கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் இருந்து ஆப்பனூர் வழியாக ஏ.புனவாசல் கிராமத்திற்கு குதிரை எடுத்து ஊர்வலமாக வருவது வழக்கம் என கூறப்படுகிறது. ஏ.புனவாசல் கிராமத்தினர் அந்த வழியாக வரக்கூடாது என்பதற்காக சாலையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் திருச்செல்வம் கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 73 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதில் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம்(வயது 45), முருகன் என்ற தூத்துக்குடி முருகன்(40), ஜெயகுரு(53), கணேசன்(50), முனீஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story