லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து புதுக்கோட்டை தனிப்படை போலீசார் கறம்பக்குடியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற சதக்கத்துல்லா (வயது 39), முகமது ஆசிக் (21), முருகேசன் (43), பிரபாகரன் (40), ராஜதுரை (39) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.33 ஆயிரத்து 930, 3604 லாட்டரி சீட்டுகள் மற்றும் 3 செல்போன், கால்குலேட்டர்கள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story