பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது


பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது
x

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலையை சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் கரூர் செங்குந்தபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அந்தநபரிடம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட அந்தநபர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிதுன்குமார் தலைமையிலான போலீசார் கரூர் செங்குந்தபுரத்தில் ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 3 பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபசாரத்திற்கு பெண்கள் ஈடுபடுவதற்கு உடந்தையாக இருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 62), லோகநாதன் (34), வெற்றி (25), வேளாங்கண்ணி (43), சுமித்ரா (44) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story