பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
கோயம்புத்தூர்
கோட்டூர்
பொள்ளாச்சி அருகே கரியாஞ்செட்டிபாளையம் பகுதியில் ஆழியாறு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கரியாஞ்செட்டிபாளையத்தை சேர்ந்த வடிவேல்(வயது 42), லட்சுமி (65), அரசூரை சேர்ந்த சேதுபதி (33), உடுமலை மருள்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (23), மாரிமுத்து (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்த 52 சீட்டு கட்டுகள், ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story