மாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்


மாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்
x

மாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம், அப்படி மாமல்லபுரத்தை சுற்றிபார்க்க வரும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்குவதும் அங்குள்ள கடைகளில் உணவு சாப்பிடுவதும் வாடிக்கையான ஒன்றாகும். இந்த நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.

இது குறித்து டாக்டர்கள் தெரிவிக்கும் போது நாள்பட்ட கெட்டுப்போன கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் இந்த உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தற்போது சிக்கன் பிரியாணி சாப்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தால் இந்த பிரியாணி கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


Next Story