பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து - 10 பேர் காயம்


பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து - 10 பேர் காயம்
x

பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.

சென்னை

பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே நேற்று காலை சாலையில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.

குத்தம்பாக்கம் 4 சாலை சந்திப்பு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென பிரேக் பிடித்ததால் அதற்கு பின்னால் வேகமாக வந்த 2 வேன்கள், தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் உள்ளிட்ட 5 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றன. இந்த விபத்தில் வாகனங்களின் முன்பகுதி மற்றும் கண்ணாடிகள் உடைந்தது.

இதில் அந்தந்த வாகனங்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காலை நேரம் என்பதால் இந்த விபத்தின் காரணமாக சாலையில் வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர்.


Next Story