வளையப்பட்டியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்


வளையப்பட்டியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Jun 2023 6:37 PM GMT (Updated: 28 Jun 2023 12:12 PM GMT)

வளையப்பட்டியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் திருச்சி சாலை நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக தகுதிசான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தார்பாய் போடாமல் மணல் ஏற்றி சென்ற லாரிகள், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புதுப்பட்டி அருகே சமீபத்தில் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட அவர்கள், அப்பகுதியை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். இதேபோல் புதன்சந்தை பகுதியில் இருந்து கொல்லிமலைக்கு சொந்த வாகனத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சொந்த பயன்பாட்டிற்காக வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story