அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும்; பட்ஜெட்டில் அறிவிப்பு


அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும்; பட்ஜெட்டில் அறிவிப்பு
x

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம்40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும்.

ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு 'தமிழ்நாடுஅரசுஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்'நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், இந்நிதியுதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021 22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது.

நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா 25 இலட்சம் ரூபாய் வீதம் 100கோடி ரூபாய் கருணைத்தொகை மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

1 More update

Next Story