சுருளகோடு பகுதியில் 50 மி.மீ. மழை பதிவு


சுருளகோடு பகுதியில் 50 மி.மீ. மழை பதிவு
x

குமரி மாவட்டத்தில் மழை பெய்தது. அதிகபட்சமாக சுருளகோடு பகுதியில் 50 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மழை பெய்தது. அதிகபட்சமாக சுருளகோடு பகுதியில் 50 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. அதே போல நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அந்த மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி யது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சுருளகோடு பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மழை அளவு

மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பூதப்பாண்டி-8.2, களியல்-19.2, கன்னிமார்-5.2, குழித்துறை-7.2, நாகர்கோவில்-3.6, புத்தன்அணை-35.4, தக்கலை-14.2, குளச்சல்-18.4, இரணியல்-2, பாலமோர்-10.4, திற்பரப்பு-19.4, கோழிப்போர்விளை-8, அடையாமடை-6, குருந்தன்கோடு-5.2, முள்ளங்கினாவிளை-8.4, ஆனைகிடங்கு-8.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மேலும் அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-12.6, பெருஞ்சாணி-37.8, சிற்றார் 1-17.6, சிற்றார் 2-19.4, மாம்பழத்துறையாறு-10.2, முக்கடல்-7 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணைகளுக்கு நீர்வரத்து

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 448 கனஅடி தண்ணீர் வந்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டி இருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 386 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. மேலும் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

இதுபோன்று பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 266 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 48 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 72 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 2 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

கன்னிப்பூ சாகுபடி

இதன் காரணமாக விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். சுசீந்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது நடவு பணி நடந்து வருகிறது. மேலும் சில இடங்களில் நடவுக்காக நிலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதே போல மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story