சட்டவிரோதமாக மது விற்ற 50 பேர் கைது
காந்தி ஜெயந்தியையொட்டி சட்டவிரோதமாக மது விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 502 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர்
காந்தி ஜெயந்தியையொட்டி நேற்றுமுன்தினம் அரசு மதுபான கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. எனவே அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்படி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்து 502 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story