500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்தது


500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்தது
x

500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்ததில் நெற்பயிர்கள் மூழ்கின.

அரியலூர்

விளை நிலங்களில் வெள்ளம்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றையொட்டி அமைந்துள்ளன. தற்போது மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தண்ணீர் தொட்டுச்செல்கிறது.

மேலும் இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளை நிலங்களை ெவள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக முத்துவாஞ்சேரி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீர் அதனை வடிகாலில் இணைக்கும் மருதையாற்றின் வழியாக புகுந்து தாழ்வான கரைப்பகுதிகளில் வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

பயிர்கள் மூழ்கின

மேலும் இந்த வழியாக சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர் வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரிலான விவசாய நிலங்களின் வழியாக தண்ணீர் செல்கிறது. இதனால் அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள சூரியகாந்தி, பருத்தி, நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அரங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மேற்கண்ட கிராமங்களில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல், சூரியகாந்தி, பருத்தி போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த நெற்பயிர்களும் அடங்கும். இதனால் இப்பகு500 acres of agricultural land were floodedதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

கோரிக்கை

இப்பகுதிகளுக்கு வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வுசெய்து நீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இப்பகுதிகளில் தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் முகாமிட்டு இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவதோடு, போதிய எச்சரிக்கையும் செய்து வருகின்றனர்.


Next Story