தமிழகத்தில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் - மண்டல வாரியாக விவரங்கள் வெளியீடு


தமிழகத்தில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் - மண்டல வாரியாக விவரங்கள் வெளியீடு
x

மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணை வெளியான நிலையில் நாளை முதல் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் 138, கோவை மண்டலத்தில் 78, மதுரை மண்டலத்தில் 125, சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தென் சென்னை-21 கடைகள், வட சென்னை-20, மத்திய சென்னை-20, வட காஞ்சிபுரம்-15, தென் காஞ்சிபுரம் -16, திருவள்ளூர் கிழக்கு-32, திருவள்ளூர் மேற்கு-14, கோவை வடக்கு-10, கோவை தெற்கு-10, திருப்பூர்-24, ஈரோடு-24, நீலகிரி-3, கரூர்-7, மதுரை வடக்கு-9, மதுரை தெற்கு-12, திண்டுக்கல்-16, சிவகங்கை-14, ராமநாதபுரம்-8, விருதுநகர்-17, நெல்லை-13, தூத்துக்குடி-16, குமரி-12, தேனி-9, சேலம்-17, தர்மபுரி-4, கிருஷ்ணகிரி-2, நாமக்கல்-18, வேலூர்-8, திருவண்ணாமலை-8, அரக்கோணம்-2 கடைகள் ஆகியவை நாளை முதல் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்ப்பட்டுள்ளது.



Next Story