சங்கராபுரத்தில்தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் 53 பேர் கைது
சங்கராபுரத்தில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அம்பேத்கர் சிலை அருகே மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆகஸ்டு 14 தேச பிரிவின் சோக வரலாறு தின மவுன ஊர்வலம் மற்றும் தனியார் மண்டபத்தில் கருத்தரங்கமும் நடைபெற இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் அருள் தலைமையில், ஒன்றிய தலைவர்கள் ராமச்சந்திரன், வேல்முருகன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வக்கீல் ஜெய்துரை, ராஜேஷ், ஒன்றியபொது செயலாளர் கோவிந்தன், முத்தையன், ஒன்றிய பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து, ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் 53 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.