54-வது நினைவு தினம்: பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!


54-வது நினைவு தினம்: பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
x

பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

முன்னாள் தமிழ்நாடு முதல் அமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியானது சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், திமுகஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனனர்.

பேரணியின் முடிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், முத்துசாமி, எம்.ஆர்.காந்தி, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. டி.ஆர் பாலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story